கலெக்டர் அலுவலகத்தில்விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-03 18:45 GMT

விழுப்புரத்தை அடுத்த சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 73), விவசாயி. இவர் தனது நிலத்தின் கூட்டுப்பட்டாவினை தனிப்பட்டாவாக மாற்றக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 20 முறை கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இருப்பினும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மனமுடைந்த ராமகிருஷ்ணன், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு விஷ பாட்டிலுடன் வந்தார். அவர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அந்த விஷ பாட்டிலை திறந்து குடித்துவிட்டார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடமிருந்த விஷபாட்டிலை பிடுங்கி அவரை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்