கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

சேத்துப்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-09-02 13:23 GMT

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், இவருடைய மகன் மணிகண்டன் (வயது 31), விவசாயி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மணிகண்டன் சென்றார்.

அப்போது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதில் அங்குள்ள பாறையின் மீது அவர் மோதியதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இன்று காலை மணிகண்டன் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர் நிலத்துக்கு சென்று பார்த்தபோது அவர் கிணற்றில் விழுந்து இறந்து கிடப்பது தெரிய வந்தது.

பின்னர் தீயணைப்பு துறையினருக்கும், சேத்துப்பட்டு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி மணிகண்டன் உடலை மீட்டனர்.

பின்னர் சேத்துப்பட்டு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்