திமுக அரசின் இரண்டாண்டு சாதனை தொடர்பான கண்காட்சி தொடக்கம்...!

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

Update: 2023-05-06 05:21 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகள் தொடர்பாக கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. அந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்