விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு

விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-11-01 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் ரெயில் நிலையத்தின் முன்புறம் கடந்த 3 நாட்களாக பெட்டி ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதைபார்த்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பெட்டியில் வெடிகுண்டு ஏதும் இருக்கலாம் என அச்சமடைந்ததோடு, இதுபற்றி விருத்தாசலம் இருப்பு பாதை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த பெட்டியை நவீன கருவி மூலம் சோதனை செய்து, திறந்து பார்த்தபோது, அந்த பெட்டியில் எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது. இதனால் போலீசார் உள்ளிட்ட அனைவரும் நிம்மதியடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்