கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு: வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கம்பம்் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-08-15 18:44 GMT

கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மொக்கப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், உடையார் களத்தெரு, ஊராட்சி மன்ற அலுவலக தெரு, பேச்சி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார வளாகம் பராமரிக்கப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான திட்டப் பணிகள் மேற்கொள்வதில் அலட்சியம் காட்டி வருவதால் பொறியாளர் மற்றும் ஓவர்சீயரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் கோதண்டபாணியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் அதிகாரியை முற்றுகையிட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்