சேலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்
சேலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
சேலம்,
போதைப்பொருட்களை தடை செய்ய வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் தாதகாப்பட்டி கேட் அருகே சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு சேலம் மண்டல செயலாளர் மைக்கேல் தங்கராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர்கள் மாதையன் (சேலம் மாநகர்), செங்கோடன் (மேற்கு), சிவா (கிழக்கு), ராஜீவ் (தெற்கு), கோவிந்தன் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தை தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஜவகர் தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.