ஒட்டுமொத்த அரசும் முடங்கி உள்ளது

ஒட்டுமொத்த அரசும் முடங்கி உள்ளது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-02-16 18:45 GMT

கோவை வெறைட்டிஹால் ரோடு மாநகராட்சி சிட்டி மேல் நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கணினி பயன்பாட் டிற்காக இருக்கை வசதி இல்லாமல் இருந்தது. இதை அறிந்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ரூ.2.5 லட்சத்தில் இருக்கை வசதி உள்ளிட்ட உபகரணங்களை நேற்று அந்த பள்ளிக்கு வழங்கினாா். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு, தி.மு.க. ஆக்கிரமிப்பு மன்றங்களை அகற்றுவது இல்லை. ஆக்கிரமிப்பு என்றால் கோவில்களை தான் இடிக்கின்றனர். கோவை மாநக ராட்சியில் தற்போது வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது.

சென்னையை போன்று கோவை மாநகராட்சி மேம்பால தூண்களில் அழகான சித்திரங்களை வரைகின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த அரசும் இருந்து கொண்டு அரசு பணிகளை கோட்டை விட்டு உள்ளது. அரசு எந்திரம் முடங்கி போகும் அளவிற்கு தேர்தல் பணி நடைபெறுகிறது.

இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக அ.தி.மு.க., பா.ஜ.க. புகாா் அளித்து உள்ளது. தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு பெரிதும் பாதிப்படைந்து உள்ளது. கோவையில் நடந்த கொலை தொடர்பாக கைது நடவடிக்கை உடனடியாக எடுத்தது வரவேற் கத்தக்கது. ஆனால் அதை முன்கூட்டியே தடுக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்