கிணற்றில் தவறி விழுந்து என்ஜினீயர் சாவு

Update: 2023-02-19 19:30 GMT

பாப்பிரெட்டிபட்டி:-

அரூர் அருகே பல் துலக்க வேப்பங்குச்சி உடைத்த போது கிணற்றில் தவறி விழுந்த என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

ஏரோநாட்டிக்கல்

தர்மபுரி மாவட்டம் அரூர் செக்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. டெய்லர். இவருடைய மகன் முகுந்தன் (வயது 26. இவர், ஏரோநெட்டிக்கல் என்ஜினியராகபெங்களூரில் பயிற்சி பெற்றுவந்தார்.

நேற்று முன்தினம் காலை பொம்மிடி அருகே பி.பள்ளிபட்டியில் தன்னுடைய பெரியம்மா ராணியை பார்ப்பதற்காக வந்திருந்தார். நேற்று காலை பல் துலக்குவதற்காக ராணியின் கிணற்றுக்கு அருகில் நின்ற ேவப்பமரத்தில் முகுந்தன் ஏறி உள்ளார்.

தவறி விழுந்து சாவு

அப்போது திடீரென மரத்தில் இருந்து முகுந்தன் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து முகுந்தனை காப்பாற்ற முயன்றனர். அப்படி இருந்தும் முகுந்தன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த பாப்பிரெட்டிபட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து முகுந்தனை கிணற்றில் இருந்து பிணமாக மீட்டனர். என்ஜினீயர் கிணற்றில் தவறி விழுந்த இறந்த சம்பவம் தொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்