வேட்டி, சட்டை அணிந்து ஒரே சீருடையில் வந்த ஊழியர்கள்

நெமிலி தாலுகா அலுவலகத்தில் வேட்டி, சட்டை அணிந்து ஒரே சீருடையில் ஊழியர்கள் வந்தனர்.;

Update: 2023-03-08 19:17 GMT

நெமிலி தாலுகா அலுவலக வளாகத்தில் மகளிர் தினவிழா நடைபெற்றது. தாசில்தார் சுமதி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் தினத்தையொட்டி அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரி வேட்டி, சட்டை அணிந்து சீருடையில் வந்திருந்தனர். துணை தாசில்தார்கள் பன்னீர்செல்வம், பாஸ்கரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் அருணகிரி, ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்