மின்வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும்

மின்வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-11 14:25 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் விழுப்புரம் கோட்டம் சார்பில் பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் பாண்டுரங்கன் வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார். திட்ட செயலாளர் புருஷோத்தமன் சிறப்புரையாற்றினார். திட்ட பொருளாளர் சந்திரசேகரன் வாழ்த்தி பேசினார். மாநில செயலாளர் தங்க.அன்பழகன் நிறைவுரையாற்றினார்.

கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்வாரியமே ஏற்று நடத்த வேண்டும், மின்வாரியம் பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும், சென்னையில் வருகிற 20-ந்தேதி நடக்கவுள்ள தர்ணாவில் பெருந்திரளாக கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, நடந்த கூட்டத்தில் கோட்ட தலைவராக சண்முகம், செயலாளராக பாண்டுரங்கன் மற்றும் 9 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்