பஸ் மோதி மின்கம்பம் முறிந்து விழுந்தது

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் பஸ் மோதி மின்கம்பம் முறிந்து விழுந்தது.

Update: 2023-06-13 18:57 GMT

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டு இருக்கும். இந்தநிலையில் நேற்று மாலையில் டவுன் பகுதியில் இருந்து தனியார் பஸ் ஒன்று நெல்லை சந்திப்பு நோக்கி வந்தது. அந்த பஸ் ஈரடுக்கு மேம்பாலத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மின்கம்பத்தில் மோதியது. இதில் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதியும் மின்கம்பமும் முறிந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பாலத்தின் கீழே யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் உடைந்து கிடந்த பாலத்தின் தடுப்பு பகுதிகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்