மின்மோட்டார் திருடிய 4 சிறுவர்கள் கைது

தூத்துக்குடியில் மின்மோட்டார் திருடிய 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-03 18:45 GMT

தூத்துக்குடி சுந்தரராமபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 55). இவர் சென்ட்ரிங் தொழில் செய்து வருகிறார். இதற்கு தேவையான பொருட்களை அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்து இருந்தாராம். இந்த நிலையில் அந்த பொருட்களை எடுக்க சென்ற போது, அதில் இருந்த மின்மோட்டார், கடப்பாறை உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 15, 16, 17 வயது சிறுவர்கள் 4 பேர் மின்மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடி இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 4 பேரையும் கைது செய்து, இளைஞர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்