விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த மூதாட்டி சாவு

விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த மூதாட்டி சாவு

Update: 2022-09-19 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள பகவதிபாளையம் இளங்கோ வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி கண்ணம்மாள், (வயது 62). கடந்த 14-ம் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து விட்டு பஸ்சில் கிணத்துக்கடவு பழைய பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் கண்ணம்மாள் மீது மோதியது. இதில் பலத்தகாயம் அடைந்த கண்ணம்மாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த கண்ணம்மாளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்