பஸ்சில் பயணித்த டிரைவர் திடீர் சாவு

பேய்க்குளத்தில் பஸ்சில் பயணித்த டிரைவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனார்.

Update: 2023-07-28 18:45 GMT

தட்டார்மடம்:

நெல்லை மாவட்டம் கருங்குளம் குன்னத்தூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெ. முருகன் (வயது 64). தனியார் பஸ் ஓட்டுநரான இவர் நேற்று சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்திற்கு தனியார் மினி பஸ்சில் வந்து இறங்கியுள்ளார். அப்போது பஸ் நிறுத்தத்தில் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பஸ்நிறுத்தத்தில் படுக்க வைத்துள்ளனர். உடனடியாக டாக்டர் அங்கு வரவழைக்கப்பட்டு, பரிசோதித்தபோது, ஏற்கனவே அவர் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது மனைவி சித்திரைக்கனி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்