டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
பாளையங்கோட்டையில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). டிரைவரான இவர் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் திருவள்ளுவர் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்து வேலை பார்த்து வந்தாா்.
நேற்று காலை வெகுநேரமாக அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது சுரேஷ் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் வெட்டும் பெருமாள், நிலைய அலுவலர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.