தவறவிட்ட பர்சை போலீசில் ஒப்படைத்த டிரைவர்

ஆட்டோவில் தவறவிட்ட பர்சை போலீசில் ஒப்படைத்த டிரைவரை பாராட்டினர்.;

Update: 2022-11-07 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் காளம்புழாவை சேர்ந்தவர் சிவராஜ், ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது ஆட்டோவில் பயணி ஒருவர் பர்சை தவற விட்டு சென்றதாக கூடலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அதில் ரூ.1,400 மற்றும் ஆதார், பான், ரேஷன் கார்டுகள் இருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மனுபிரசாத் என்பவரது பர்ஸ் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது அண்ணன் ஸ்ரீஜித் வரவழைக்கப்பட்டு, கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் முன்னிலையில் சிவராஜ் உரியவரிடம் வழங்கினார். தொடர்ந்து ஆட்டோ டிரைவரின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்