கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் தண்ணீரில் மூழ்கி சாவு
ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த லாரி டிரைவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த லாரி டிரைவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
லாரி டிரைவர்
ஓட்டப்பிடாரம் அருகே குறுக்கு சாலையைச் சேர்ந்தவர் குமார் (வயது 46). லாரி டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குமார் நேற்று முன்தினம் பி.சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு, வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேர ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் அவரை பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று பி.சுப்பிரமணியபுரம் கிராமத்தில் ஆலமரத்து அருகே உள்ள கிணறு பகுதியில் குமார் அணிந்திருந்த செருப்பு மற்றும் பீடி, தீப்பட்டி உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதை சிலர் பார்த்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பிணமாக மீட்பு
இதுகுறித்து குடும்பத்தினர் ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். சம்வ இடத்துக்கு சென்ற ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் சென்று கிணற்று பகுதியில் விசாரணை நடத்தினர். மேலும் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அப்போது குமார் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தண்ணீரில் மூழ்கி சாவு
மேலும் இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவ்வழியாக சென்ற குமார் தடுமாறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.