சாயல்குடி,
சாயல்குடி அருகே காணிக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் உக்கிர பாண்டியன்(வயது 33). ஆம்னி பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சாயல்குடியில் இருந்து காணிக்கூர் கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திட்டங்குளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உக்கிரபாண்டியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.