டிராக்டரில் சிக்கி டிரைவர் பலி

சின்னமனூர் அருகே டிராக்டரில் சிக்கி டிரைவர் பலியானார்.

Update: 2023-08-18 18:45 GMT

சின்னமனூர் ஒத்தவீட்டை சேர்ந்தவர் குப்பமுத்து (வயது 42). கார் டிரைவர். நேற்று முன்தினம் இவர், சின்னமனூரில் இருந்து டிராக்டரில் ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக்கொண்டு சுக்காங்கல்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். டிராக்டரை கண்ணன் என்பவர் ஓட்டினார். சுக்காங்கல்பட்டியில் மேடான ஒரு இடத்தில் டிராக்டர் சென்றது. அப்போது டிராக்டர் தூக்காமல் இருக்க அதன் முன்பகுதியில் குப்பமுத்து ஏறி நின்றார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் டிராக்டருக்கு அடியில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்