மரக்கிளை தலையில் விழுந்து டிரைவர் சாவு
தாயில்பட்டி அருகே வேனில் இருந்து அகற்றும் போது மரக்கிளை தலையில் விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே வேனில் இருந்து அகற்றும் போது மரக்கிளை தலையில் விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
வேன் டிரைவர்
தாயில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் பாலகுருநாதன் (வயது 19). இவர் விஜயகரிசல்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார்.
சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டைக்கு வேனில் வந்து கொண்டு இருந்தார். அப்போது வனமூர்த்திலிங்காபுரம் பஸ் நிறுத்தம் அருகே வரும் போது வேப்பமரத்தின் கிளை எதிர்பாராதவிதமாக வேன் மீது முறிந்து விழுந்தது. அப்போது மரக்கிளையை அகற்ற முடியாததால் பாலகுருநாதன் சிரமப்பட்டு வந்தார்.
மரக்கிளை விழுந்து பலி
இதையடுத்து அவர், தனது சகோதரருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் அளித்தார். பின்னர் அவர் விரைந்து வந்தார். இருவரும் சேர்த்து மரக்கிளையை அகற்றிய போது எதிர்பாராதவிதமாக மரக்கிளை பாலகுருநாதனின் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.