கடலூர் அருகேரெயில் முன்பாய்ந்து டிரைவர் தற்கொலை

கடலூர் அருகே ரெயில் முன்பாய்ந்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-01 19:59 GMT

கடலூர் முதுநகர், 

கருத்து வேறுபாடு

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கே.என்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் மணிகண்டன் (வயது 35). டிரைவரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுபா (32) என்ற பெண்ணுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மணிகண்டன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

ரெயில் முன்பாய்ந்து தற்கொலை

இந்த நிலையில் மணிகண்டன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் இரவு திருப்பாதிரிப்புலியூர் அருகே உள்ள சூரப்பநாயக்கன் சாவடி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது மணிகண்டன் அவ்வழியாக சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த டிரைவர் ரெயில்முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்