திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசியில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க மறுப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வீரன், செயலாளர் முருகன், பகுத்தறிவு கழக அமைப்பாளர் எழில்வாணன், துணைத்தலைவர் செந்தில்குமார், துணைச் செயலாளர் அன்பழகன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் கோபால் வரவேற்றார். திராவிடர் கழக காப்பாளர் டேவிட் செல்லத்துரை கண்டன உரையாற்றினார். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜசங்கர் நன்றி கூறினார்.