10 பேரை கடித்து குதறிய நாய்
விருதுநகரில் 10 பேரை நாய் கடித்து குதறியது.;
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெறி நாய் ஒன்று அடுத்தடுத்து 10 பேரை கடித்து குதறியது. பெண் தூய்மைப்பணியாளர் உள்பட 10 பேர் இந்த வெறிநாய் கடித்ததால் பாதிப்பு ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். விருதுநகரில் சாலைகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.