சேதமடைந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும்
சேத்தூர் ஊராட்சியில் சேதமடைந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
குத்தாலம்:
குத்தாலம் ஒன்றியம் சேத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் சேதம் அடைந்தால் 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் புதிய வகுப்பறை கட்டிடம கட்டப்பட்டது. இதில் தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பழைய பள்ளி கட்டிடம் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் கட்டிடம் முழுவதும் புதர்மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. பழைய கட்டிடத்திற்கு அருகே வீடுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.