பள்ளமான சாலையை சீரமைக்க வேண்டும்
பள்ளமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள சுடுகாட்டின் நுழைவு வாயிலில் பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. இந்த வழியே பல கிராமங்களுக்கு செல்லும் பாதை உள்ளது. பகலிலும் இரவிலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துகள் நடக்கிறது. விபத்துகளை தடுக்க சாலையை சீரமைக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.