உறுப்பினர்களின் கோரிக்கைகள் பாகுபாடின்றி நிறைவேற்றப்படும்

உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைக்கு ஏற்ப பாகுபாடின்றி நிறைவேற்றப்படும் என வேதாரண்யம் ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.

Update: 2022-05-18 19:06 GMT

வேதாரண்யம்:

ஒன்றியக்குழு கூட்டம்

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அறிவழகன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராமலிங்கம், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலர் ரமேஷ் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

நடராஜன்(அ.தி.மு.க.):- கோடையை சமாளிக்க, கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரியாப்பட்டினம் சந்தனமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தேரோடும் வீதி மண்சாலையாக உள்ளது. அதனை தார் சாலையாக மாற்றி தர வேண்டும்

ஆகாய தாமரைகள்

அருள்மேரி (தி.மு.க.):- வார்டில் உள்ள சாலைகள் மற்றும் பாலங்கனை மேம்பாடு செய்ய வேண்டும்.ராஜேந்திரகுமார் (பா.ஜ.க.):- ஊராட்சியில் தெரு மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.வைத்தியநாதன் (தி.மு.க.):- வடிகால் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும். குடிநீர் பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.வேதரத்தினம் (பா.ஜ.க.):- மழைக்காலத்தில் தண்ணீரை வீணாக்காமல் தடுக்க தடுப்பணை அமைக்க வேண்டும்.

மின்மயானம்

கண்ணகி (தி.மு.க.):- ஆயக்காரன்புலம் பகுதியில் பொது மின்மயானம் அமைக்க வேண்டும்.அறிவழகன் (அ.தி.மு.க.):- கோடியக்காடு முருகன் கோவில் திருவிழா தேரோட்டம் வைகாசி மாத இறுதியில் நடைபெறும். இதற்காக கோவிலை சுற்றி உள்ள சேதமடைந்த சிமெண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும்.இதேபோல் கவுன்சிலர்கள் தனபால், கோமதி, அமுதா ஆகியோர் குடிநீர் சாலை, மின் வசதி ஆகிய பிரச்சினை குறித்து பேசினர்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

கமலா அன்பழகன்(தலைவர்):- உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப பாகுபாடின்றி நிறைவேற்றப்படும். தற்போதைய நிலையில் குடிநீர், சாலை வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.இதில் வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், உணவுத்துறை அதிகாரி கோதண்டபாணி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்