வேலியில் சிக்கி மான் சாவு

பாணாவரம் அருகே வேலியில் சிக்கி மான் இறந்தது.

Update: 2023-07-27 18:33 GMT

பாணாவரத்தை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பு வேலி அருகே நேற்று காலை மான் ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து கேள்விப்பட்ட வருவாய்த் துறையினர் பாணாவரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த மானை மீட்டனர்.

தொடர்ந்து மான் மாந்தோப்பு வேலியில் சிக்கி இறந்ததா?, அல்லது யாரேனும் தூரத்தியபோது இறந்ததா என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து இறந்த மானை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்பு அதேப்பகுதியில் தீவைத்து எரிக்கபட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்