பஸ்நிலையத்தில் பிணமாக கிடந்த தொழிலாளி

நாசரேத் பஸ்நிலையத்தில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.;

Update: 2022-09-17 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் என்.டி.என் தெருவை சேர்ந்தவர் வேலவன் (வயது 62). திருமணம் ஆகாத இவர் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நாசரேத்தில் இருந்து தினசரி சாத்தான்குளத்திற்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். நேற்று நாசரேத் பஸ்நிலையத்திற்கு வந்த வேலவன் அங்குள்ள பொது சுகாதார வளாகத்துக்கு சென்றார். பின்னர் மற்றவர்கள் சென்று பார்க்கும்போது அவர் உள்ளே பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் நாசரேத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வேலவன் பொது சுகாதார வளாகத்தில் வழுக்கி விழுந்து இறந்தாரா? அல்லது மாரடைப்பு காரணமாக இறந்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்