வீட்டை கேட்டு மாமியாரை கொடுமைப்படுத்திய மருமகள்கள்

பரங்கிப்பேட்டையில் வீட்டை கேட்டு மாமியாரை கொடுமைப்படுத்திய மருமகள்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.;

Update:2022-08-27 00:34 IST

பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் வசந்தா (வயது 65). இவர் சம்பவத்தன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்த புகாரில், தான் வசித்து வரும் வீட்டை கேட்டு தனது மகன் கல்யாணசுந்தரம் பிரச்சினை செய்து வருகிறார். மேலும் எனது 2 மருமகள்களும் வீட்டை கேட்டு தன்னை கொடுமை செய்வதாகவும் கூறினார். அதன் பேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க பரங்கிப்பேட்டை போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பரங்கிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் வசந்தாவின் மகன் கல்யாணசுந்தரம் மற்றும் மருமகள்களிடம் இனிமேல் வசந்தாவிடம் எந்தவொரு பிரச்சினையும் செய்யக்கூடாது என எச்சரித்தார். இதையடுத்து அவர்கள், இனி பிரச்சினையில் ஈடுபடமாட்டோம் என போலீசாரிடம் எழுதி கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்