வீட்டை விட்டு விரட்டப்பட்ட மாமனாரை தாக்கிய மருமகள்

வீட்டை விட்டு விரட்டப்பட்ட மாமனாரை தாக்கிய மருமகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-02-04 18:37 GMT

வீட்டை விட்டு விரட்டப்பட்ட மாமனாரை தாக்கிய மருமகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி கணவாய்மோட்டூர் ரங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 72). இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மகன் சுகுமார், முன்னாள் ராணுவ வீரர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தெய்வசிகாமணியும், காமாட்சியும் தனது மகன் வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் சொத்துக்களை தன் பெயருக்கு எழுதித் தருமாறு வற்புறுத்துவதாகவும் தங்க இடமில்லாமல் அவதிப்படுவதாகவும் கூறி குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தெய்வசிகாமணி அவரது மனைவி காமாட்சி ஆகியோர் அவர்கள் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர் இந்நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைத்தார்களை செலவுக்காக விற்பனை செய்ய நேற்று காலையில் தெய்வசிகாமணி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மருமகள் வனிதா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாசமாக பேசி அங்கிருந்து கற்களால் சரமாரியாக தாக்கினார்.

இதில் காலில் காயம் ஏற்பட்ட தெய்வசிகாமணி சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் தெய்வசிகாமணியின் மருமகள் வனிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.==========

Tags:    

மேலும் செய்திகள்