ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் தினக்கூலி ரூ.648 ஆக உயர்வு
வ.உ.சி. சிறுவர் பூங்கா கட்டணம் அதிகரிக்கப் பட்டது. ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் தினக்கூலி ரூ.648 ஆக உயர்த்தி கோவை மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை
வ.உ.சி. சிறுவர் பூங்கா கட்டணம் அதிகரிக்கப் பட்டது. ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் தினக்கூலி ரூ.648 ஆக உயர்த்தி கோவை மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினக்கூலி உயர்வு
மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் விக்டோரியா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் கல்பனா, ஜனவரி 1-ந் தேதி முதல் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் தினக்கூலியை ரூ.648 ஆக உயர்த்தி வழங்குவதற்கான சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானம் அனைத்து கவுன்சிலர்களாலும் ஆதரிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சிறுவர் பூங்கா கட்டணம்
கூட்டத்தில் வ.உ.சி. சிறுவர் பூங்காவில் நுழைவுக்கட்டணத்தை உயர்த்தி வசூலித்தல், வ.உ.சி. பூங்காவில் வ.உ.சிதம்பரனாருக்கு முழு உருவச் சிலையை பொதுப்பணிதுறை மூலம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்தல், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் கீழ் சேதமடைந்த தார் சாலைகளை சீரமைக் கும் பணி ரூ.26 கோடியில் நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி பகுதியில் வழிபாட்டு தலங்களுக்கு கட்டணமின்றி குடிநீர் இணைப்பு வழங்குதல், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய நாய் ஒன்றுக்கு ரூ.445-ல் இருந்து ரூ.700 ஆக உயர்த்தி வழங் குவது,
முதல்கட்டமாக ஒரு மண்டலத்திற்கு 1000 தெரு நாய்கள் வீதம், 5 மண்டலங்களுக்கு 5 ஆயிரம் தெருநாய்களை பிடிக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட 65 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
பணிகளை முடிக்க வேண்டும்
கூட்டத்தில் பங்கேற்று கவுன்சிலர்கள் செய்த விவாதம் வருமாறு:-
கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்விகார்த்திக்:-
கிழக்கு மண்டல பகுதிகளில் பூமி பூஜை போட்டு தொடங்கிய வளர்ச்சி பணிகள் அனைத்தும் 75 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்று உள்ளது. அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன்:-
80-வது வார்டு குறிஞ்சி கார்டனில் காலி இடத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கூலியை உயர்த்திய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், பரிந்துரைத்த அமைச்சர், மேயர் மற்றும் ஆணையாளருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
பாதாள சாக்கடை பணிகள்
கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி:-
26-வது வார்டு பகுதியில் அரைகுறையாக உள்ள பாதாள சாக்க டை திட்ட பணிகள் எப்போது முடியும் என்பதை தெரிவித்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
காலை நேரத்தில் நடு ரோட்டில் லாரிகளை நிறுத்தி குப்பை தொட்டிகளில் இருந்து குப்பைகளை அள்ளுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது
. மேலும் டிரைவர்கள் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே லாரிகளை சாலையின் ஓரமாக நிறுத்தி குப்பைகளை அள்ள அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.