தினத்தந்தி புகார் ெபட்டி

தினத்தந்தி புகார் ெபட்டி

Update: 2023-02-08 17:07 GMT

தடிகள் அகற்றப்படுமா?

பேச்சிப்பாறை அருகே சேனங்கோடு பகுதியில் பேச்சிப்பாறை ஊராட்சி சார்பில் சாலையோரத்தில் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இந்த வடிகாலின் மேல் பகுதியில் தனி நபர்கள் மரத்தடிகளை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் புதிதாக கட்டப்பட்டுள்ள வடிகால் சேதமடைந்து வருகிறது. எனவே பேச்சிப்பாறை ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக மரத்தடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜான்ரோஸ். பேச்சிப்பாறை.

வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில் கோட்டார் வழியாக ரெயில்வே நிலையத்துக்கு செல்லும் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலை தற்போது சேதமடைந்து மரண பள்ளங்களுடன் காட்சி அளிக்கிறது. இதனால் ரெயில் நிலைத்துக்கு செல்லும் பயணிகள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்குகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

சேதமடைந்த மின்கம்பம்

மேலசங்கரன்குழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட விளைவீடு பகுதியில் சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதிகா நாகராஜன், மேலசங்கரன்குழி. 

சாலையை சீரமைக்க வேண்டும்

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட விழுந்தயம்பலம் பகுதியில் இருந்து அம்சிக்கு செல்லும் சாைல சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைப்பதுடன், பழுதடைந்த விளக்குகளை மாற்றி புதிய விளக்குகள் பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கவேல், விழுந்தயம்பலம்.

மூடி அமைக்கப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட குளத்தூரில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மூலம் குளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டியில் மூடி அமைக்கப்படாமல் திறந்த நிலையில் காணப்பட்டதால் பறவைகள் தஞ்சமடைந்து தண்ணீரில் விழுந்து இறக்கும் நிலை இருந்தது. இதுபற்றி, 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து திறந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கு மூடியை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-ஜோஸ், குளத்தூர்.

மின்மாற்றி மாற்றி அமைக்கப்படுமா?

தக்கலை அருகே பனவிளையில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள வணிக நிறுவனத்தின் முன்புறம் மின்மாற்றி உள்ளது. அதனை தொடும் அளவில் அருகில் டெலிபோன் கம்பமும் உள்ளது. மின்மாற்றியிலிருந்து செல்லும் உயர் அழுத்தமின்கம்பி டெலிபோன் ஒயரில் உரசியபடியே உள்ளது, ஏற்கனவே பி.எஸ்.என்.எல். ஊழியர் பழுதை சரி செய்ய சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது எனவே இரண்டு கம்பங்களும் அருகருகே இருப்பதை தவிர்த்து மின்மாற்றியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாசர், பனவிளை.

Tags:    

மேலும் செய்திகள்