ஆலங்குடி அருகே பாத்தம்பட்டியை சேர்ந்தவர் சுதாகரன். இவரது பசுமாடு ஊரின் அருகில் உள்ள இடத்தில் மேய்ந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பியை பசுமாடு மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு தூக்கி வீசப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சுதாகரன் அப்பகுதியினர் உதவியுடன் பசுவை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பசுவை பரிசோதித்த கால்நடை மருத்துவர் ஏற்கனவே பசு செத்து விட்டதாக கூறினார்.