குளத்தில் தவறி விழுந்த பசு மாடு

பூம்புகார் அருகே குளத்தில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

Update: 2023-08-26 18:45 GMT

திருவெண்காடு:

பூம்புகார் அருகே தர்மகுளம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மணிமேகலை என்பவரது பசு மாடு நேற்று அங்கு கொட்டப்பட்டு இருந்த குப்பைகளில் சிக்கி தவறி குளத்தில் விழுந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் பூம்புகார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பூம்புகார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி சிறப்பு அலுவலர் துரைமுருகன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குளத்தில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்டு அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சம்பவத்தை அறிந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று பசுமாட்டை மீட்டதற்கு அந்த பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்