கிணற்றில் விழுந்த மாடு மீட்பு
காரிமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்கப்பட்டது.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள கரியன்கொட்டாயை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மாடு அங்குள்ள சுமார் 60 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.