தம்பதியை தள்ளிவிட்டு நகை பறிப்பு

தம்பதியை தள்ளிவிட்டு நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2023-07-13 19:53 GMT

திருச்சி கே.சாத்தனூர் வடுகப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி நாகலட்சுமி(வயது 26). இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் பஞ்சப்பூர் பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், அவர்களை கீழே தள்ளிவிட்டு நாகலட்சுமி கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த நாகலட்சுமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்