குடிசை தீயில் எரிந்து நாசம்

பேட்டையில் குடிசை தீயில் எரிந்து நாசமானது.;

Update: 2023-06-13 19:37 GMT

பேட்டை:

நெல்லை அருகே பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் நாடோடி மகன் ஜோதிகுமார் (வயது 38). இவரது வீடு குடிசை வீடு ஆகும். நேற்று மாலை அந்த குடிசையின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. உடனே அங்கிருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர், டி.வி. உள்ளிட்ட பொருட்களை அங்கிருந்து வேகமாக அப்புறப்படுத்தினர். அதற்குள் தீ மளமளவென குடிசை முழுவதும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், தீவிபத்தில் குடிசை முற்றிலும் எரிந்து நாசமானது. அங்கு பீரோவில் இருந்த ஊசிமணி, பாசி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் சேதம் அடைந்தன. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேத மதிப்பு குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

Tags:    

மேலும் செய்திகள்