குடிசை தீயில் எரிந்து நாசம்

குடிசை தீயில் எரிந்து நாசமானது.;

Update: 2022-10-14 18:49 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் காலனி தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மனைவி பார்வதி. நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென அவரது குடிசை தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் சிறிய குடிசை என்பதால் தீ மளமளவென பிடித்து முற்றிலும் குடிசை எரிந்து நாசமானது. இதில் குடிசையில் வைக்கப்பட்டிருந்த ஆதார் அட்டை, ரேஷன் அட்டை போன்ற ஆவணங்களும், ரூ.5 ஆயிரம் பணமும் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் மற்றும் தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்