குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்

கொள்ளிடம் அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசம் அடைந்தது

Update: 2022-09-26 18:45 GMT

கொள்ளிடம் அருகே பச்சை பெருமாநல்லூர் ஊராட்சியை சேர்ந்த மத்தளமுடையான் கிராமத்தில் உள்ள ஜெயக்குமார் என்பவரின் குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தாலும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. அந்த வீடும் நாசமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் ஜெயக்குமார் மனைவி தேவகியிடம் நிவாரண உதவி வழங்கியதுடன் அரசின் சார்பில் கான்கிரீட் வீடு கட்டி தருவதாக கூறினர். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்