ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அரங்கல்துருகம் பகுதியை சேர்ந்தவர் அனுமன்.
இவா், குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.