கடற்கரையில் இளம்பெண் பிணம்
மணப்பாடு கடற்கரையில் இளம்பெண் பிணம் கரை ஒதுங்கியது
குலசேகரன்பட்டினம்:
மணப்பாடு கலங்கரை விளக்கம் அருகே காலை 9 மணிக்கு 25 வயது முதல் 35 மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் பிணம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் கடலோர போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பெண்ணின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்? இறந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.