பச்சிளம் பெண் குழந்தை பிணம் முட்புதரில் வீச்சு

கணியம்பாடியில் பெண் குழந்தையின் பிணத்தை முப்புதரில் வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-04 17:32 GMT

பச்சிளம் குழந்தை பிணம்

வேலூர் மாவட்டம், கணியம்பாடி திரு.வி.க.நகர் பகுதியில் முட்புதரில் இருந்து பச்சிளம் பெண் குழந்தை பிணத்தை நாய்கள் கவ்வி கொண்டு வந்துள்ளது. அப்போது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அந்த நாய்களை விரட்டினர்.

மேலும் இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

பிணமாக மீட்கப்பட்ட குழந்தை பிறந்து 10 முதல் 15 நாட்கள் ஆகி இருக்கும். குழந்தையின் கை மற்றம் கால்களை நாய்கள் கடித்துள்ளது. குழந்தையை உயிரோடு வீசிவிட்டு சென்றார்களா? அல்லது குழந்தை இறந்த பிறகு வீசினார்களா? என்பது தெரியவில்லை.

தகாத உறவில் பிறந்ததால் குழந்தையை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்