கழிவுநீர் வாய்க்கால் கான்கிரீட் சுவர் சரிந்து விழுந்தது

கந்தர்வகோட்டை-கறம்பக்குடி சாலையில் கழிவுநீர் வாய்க்கால் கான்கிரீட் சுவர் சரிந்து விழுந்தது.

Update: 2022-11-11 18:42 GMT

கந்தர்வகோட்டை-கறம்பக்குடி சாலையில் கழிவு நீரும், மழை நீரும் வெளியேறுவதற்காக கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கழிவு நீருக்கு தோண்டப்பட்ட மண் சாலையோரத்தில் குவியலாக கொட்டியிருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அந்த மண் குவியல் சேறும், சகதியுமாகி நடப்பதற்கே முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மழைக்காலத்தில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறுவதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவு நீர் வாய்க்காலின் கான்கிரீட் சுவர் சரிந்து விழுந்தது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கழிவு நீர் வாய்க்காலை தரமாக அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்