பழைய கட்டிடத்தை இடித்த போது காங்கிரீட் சிலாப் உடைந்து விழுந்து தொழிலாளி பலி
ஆரல்வாய்மொழியில் பழைய கட்டிடத்தை இடித்த போது காங்கிரீட் சிலாப் உடைந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழியில் பழைய கட்டிடத்தை இடித்த போது காங்கிரீட் சிலாப் உடைந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டு கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 54), கூலி தொழிலாளி. இவர் நேற்று காலையில் வடக்கூர் கல்பாளையதெருவில் ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணிக்கு சென்றார். அங்கு பணி முடியும் தருவாயில் வீட்டின் மேலே இருந்த ஒரு பெரிய சிலாப் உடைந்து விழுந்தது. இதில் சிலாப்பின் அடியில் ஜெயக்குமார் சிக்கினார். இதை பார்த்த சக தொழிலாளிகள் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடல் மீட்பு
மாவட்ட உதவி அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டனர். மேலும், ஆரல்வாய்மொழி சப் -இன்ஸ்பெக்டர்கள் கீதா, பிரான்சிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த ஜெயக்குமாருக்கு பாக்கியம் என்ற மனைவியும், ஞானபிரமிளா என்ற மகளும், ராஜா என்ற மகனும் உள்ளனர். வேலைக்கு சென்ற இடத்தில் சிலாப் உடைந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.