வீட்டு கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்தது
தொடர்மழையினால் வீட்டு கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்தது
விருதுநகர் அல்லம்பட்டி ராமன் தெருவை சேர்ந்தவர் ஆண்டவர். இவர் அப்பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக இவரது வீட்டு மாடியின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஆண்டவர் தனது குடும்பத்தினருடன் தரைத்தளத்தில் வேறு ஒரு அறையில் தங்கி இருந்ததால் பாதிப்பு ஏதுமில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.