இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து நத்தம் பஸ்நிலையம் அருகே சாலை மறியல் நடந்தது.;

Update: 2023-09-13 19:45 GMT

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து நத்தம் பஸ்நிலையம் அருகே சாலை மறியல் நடந்தது. இதற்கு தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் துணை செயலாளர் தவநூதன், உறுப்பினர்கள் பொன்னுச்சாமி, பழனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 55 பேரை நத்தம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்