இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்

களம்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-28 09:32 GMT

ஆரணி 

களம்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆரணி, ஆக.29-

களம்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போளூர் வட்டார குழு, களம்பூர் நகர கிளையின் சார்பில் காந்தி சிலை அருகே நடந்த உண்ணாவிரதத்துக்கு வட்ட குழு நிர்வாகி மே.சமாதானம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரா.தங்கராஜ் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆரணி ஹவுசிங் போர்டு முதல் போளூர் நெடுஞ்சாலை எட்டிவாடி வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்கத்தில் குடிநீர் குழாய்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அரசே மாற்றி அமைக்க வேண்டும், பஸ் நிறுத்தம் அருகே அண்ணா சிலை, காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, எம்.ஜி.ஆர்.சிலை, அம்பேத்கர் சிலை, வீரா ஆஞ்சநேயர் கோவில் அகற்றாமல் சாலை அமைக்கப்பட வேண்டும்,

வேலூர் கண்ட்டோன்ட்மென்ட் முதல் சென்னை கடற்கரை வரை இயங்கும் மின்சார ரெயிலை திருவண்ணாமலையிலிருந்து புறப்பட செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரதப் போராட்டத்தை மாவட்ட நிர்வாகி முத்தையன் முடித்து வைத்தார். இதில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ரஹ்மத்துல்லா, இலக்கிய அணி மாநில செயலாளர் அன்பு, வட்டச் செயலாளர் மோகன்ராஜ், ஆரணி வட்ட செயலாளர் குப்புரங்கன், சித்த மருத்துவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்