கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் 25 ஆண்டுகளாக வீடுகட்டி வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்க கோரி நேற்று தாலுகா அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-10-11 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் 25 ஆண்டுகளாக வீடுகட்டி வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்க கோரி நேற்று தாலுகா அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தாலுகா அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி அருகே மந்தித் தோப்பு வருவாய் கிராமத்தில் இந்திரா காலனி மற்றும் கணேஷ் நகர் பகுதிகளில் 25 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு, தற்போது வரை வீடுகளை கிராம கணக்கில் பதிவு செய்யவில்லை. மேலும் அந்த மக்களுக்கு அரசு வழங்கிய இடங்களுக்கு பட்டா வழங்காமலும், அப்பகுதி வருவாய் துறை அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனராம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பட்டா வழங்காமல் அலைக்கழிக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும், 25 ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளுக்கு உடனடியாக பட்டா வழங்க கோரியும் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலந்து கொண்டவர்கள்

இதில் மாவட்டச் செயலாளர் கருப்பன், மாவட்ட நிர்வாக குழு சேதுராமலிங்கம், நகரச் செயலாளர் சரோஜா, மாவட்ட குழு பரமராஜ், நகரத் துணைச் செயலாளர் அலாவுதீன், பொருளாளர் ராஜூ, நகரத் துணைச் செயலாளர் முனியசாமி, நகர குழு வழக்கறிஞர் ரஞ்சனி கண்ணம்மா உட்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கோரிக்கை மனுவை தாசில்தார் லெனினிடம் அவர்கள் வழங்கினர். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட தாசில்தார் உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்