தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-09 12:36 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட 11-வது மாநாடு தூத்துக்குடியில் நடந்தது. மாநாட்டுக்கு பாபு, மாநகர வார்டு உறுப்பினர் தனலட்சுமி, பி.பரமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநாட்டு கொடியை மூத்த உறுப்பினர் மரியம்பீவி ஏற்றி வைத்தார், மறைந்த மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன் நினைவாக கொண்டுவரப்பட்ட நினைவு ஜோதியை ஜி.கோ.பழனிச்சாமி பெற்றுக் கொண்டார். சி.மாடசாமி வரவேற்று பேசினார். மாநில துணை செயலாளர் சுப்பராயன் எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தேசியக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோ.பழனிச்சாமி மாநாட்டை நிறைவு செய்து பேசினர்.

மாநாட்டில் புதிய மாவட்ட செயலாளராக ப.கரும்பன், துணை செயலாளர்களாக வ.பாலமுருகன், கு.பாபு, பொருளாளராக த.சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

மாநாட்டில், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பள தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்து உள்ள மழைக்கால நிவாரணத் தொகையை தாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, அந்த நிறுவனம் மக்களை திசைதிருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு கவனத்தில் கொண்டு அந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள சாலை மேம்பாலங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும், நீட்தேர்வு ரத்து செய்ய வேண்டும்.எட்டயபுரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், எட்டயபுரத்தை தலைமையிடாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும்.குளங்களை சீரமைக்க வேண்டும். ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்கரை குளத்தை மராமத்து செய்ய வேண்டும், ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும், தூத்துக்குடி-விளாத்திகுளம் வழியாக அருப்புக் கோட்டைக்கான ரெயில் பாதை பணிகளை விரைந்து தொடங்க வேணடும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கடசி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்