நீட் விலக்கு மசோதா தொடர்பாக மீண்டும் தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு..!
நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக அரசிடம் மீண்டும் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் கடந்தாண்டு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு அனுப்பினார். நீட் விலக்கு மசோதா குறித்து கடந்த ஆண்டே மத்திய சுகாதார அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில் தமிழக மருத்துவத்துறையும் மத்திய அமைச்சகத்திற்கு பதில் அளித்திருந்தது.
இந்நிலையில், ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக மருத்துவத்துறையிடன் மத்திய அரசு மீண்டும் விளக்கம் கேட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா குறித்து சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஓரிரு வாரங்களில் தமிழக அரசுத் தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்